மருதாணி

மருதாணி
அவள் விரலில்
வைத்துக் கொள்கிறது….

மருதாணி

வெட்கத்தில் மருதாணி,
செக்கச் சிவக்கிறது
அவள் விரல் தொடுகையில்…

மழை நீர் சேகரிப்பு

அவள் பாதச் சுவடுகள்
அதிக மழை நீரைச் சேமிக்கின்றன…

மண் மனம் அவளை ஆழப் பதித்துக் கொண்டதில்…

பூ சூடிய பெயர்

கொஞ்சம் கர்வம் தான் அவளுக்கு..!

அவளைத் தவிர எந்தப் பூக்கள் தான் தனக்கெனத் தனிப் பெயர் சூடிக்கொள்கிறது…..?

தூரப்பார்வை

பார்வையின் மறுமுனையில் இன்னும் எழுதிப் பார்க்காத கவிதையாக இருக்கிறாள் அவள்…

விழியின் வரிகள்

வரிவரியாகத் தேடியும்
கிடைக்கவில்லை,

அவள் விழி பேசும்

கவிதையின் வரிகள்…

சுமையில்லா சுமை

மனம் தாண்டி
மடி சுமக்க வேண்டுமடி
உன்னை
ஒருமுறையேனும்…

#மகளதிகாரம்

அவள் அகமழகு

அவள்
அழகைத் தாண்டிய
என்
தேடலின்
அர்த்தங்கள் – எனக்கானது…

#அவளதிகாரம்