அலைகடல்

அலையில்லா கடல் உறங்குகிறது இரவில், மனம்போல!

மனதின் முகங்கள்

தனிமை, இரவு, ஏதோவொரு அகபுற வலி.,

அவ்வலி தரும் துன்பத்தில், துன்பத்துணையாக அவ்விரவில் நினைவில் வருபவர்கள்,

நம்மனதிற்கான முகங்கள்…

இரவு இரவாமல்

மரணித்த மனங்கள்
மறுபிறப்பு எடுக்கிறது – இரவுகளில்

இரவாகவே ஓர் நாள்

இரவாகவே ஓர் நாள் வேண்டும்,

மீண்டும் ஒருமுறை

பால்யம் வரை பயணித்துப் பார்க்க…

நட்சத்திர பூக்கள்

அவள் தொட்டு வைத்த பூக்கள் நட்சத்திரமானது,

அவளிதழ் முத்தமிட்ட பூ மட்டுமே நிலவானது..