மடிமீது மனம் ஏந்தி

அவ்விரவின் என் பங்கு தூக்கம் மறக்கிறேன் நான்…

என் மடிமீது முகம் புதைத்து அவள் தூங்கும் அழகில்….

முகப்பரு கூட அழகே

முதல் முறை சொல்கிறேன் “முகப்பரு” கூட அழகென்று….

அவளிடமதைக் கண்டதால்…

அவளடி வேண்டி

அவளடி நின்ற நிலத்தின் அடுத்த அடி தன் விலையை தானே கூட்டிக்கொள்கிறது….

உறைந்த பனிக்கூழ்

உருகும் பனிக்கூழும் உயிர்பெருகிறது,

அவளிரு கைக்குள் குடி புகுகையில்,

அவள்பா அன்பினால்…

அவளும் நிலவும்

அவளது முகம் காட்டி நிலாச் சோறு ஊட்டியது தாய் நிலா தன் கூட்டத்திற்கு – அதன் வானத்தில் ….

அவளும் நிலவும்

யாருமில்லா இரவுகளில் கண்விழித்து அவள் பாதச்சுவடு தேடுகிறது – நிலா….

அவளும் நிலவும்

வந்த வழி மறந்து எதிர் வழி செல்கிறது நிலா – அவளைப் பார்த்ததிலிருந்து…

அவளும் நிலவும்

இடவல இடம் நகர மறுக்கிறது நிலா – அவள் நின்றதைப் பார்க்கையில் மட்டும்….