தண்ணீர் தடயங்கள்

வெப்பத்தில் வெடித்தது பூமியின் உதடுகள்,

வற்றிய குளங்களில் உதட்டுப் பிளவுகள்…

விதை, அதை விதை

பதியும் விதைகளெல்லாம் நாளைய பதில்கள்…

விடை தேடி விடியும் நாட்களில்,
விதை தேடி அலைவோம் ஒர் நாளில்…

காடு எனும் hardware

காடு எனும் hardware-ல் இவன் கை விரல் எனும் software-ஆல் அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கையை update செய்யப்போகிறான்

வழிகாட்டி

இன்று வழி தேடிச் செல்பவன் நாளை வழி காட்டிச் செல்வான் – விவசாயத்தில்.

காகிதப்பூ மழை

வாசனை இல்லாத காகிதப்பூ போல மதிப்பிழந்தது நகரத்தில் பெய்யும் மழை அதன் மண் வாசனை இல்லாமல்