குறுக்கு வழியில் குழந்தைப் பருவம்

ஐஸ்கிரீம் சாப்பிட்ட நடுநிசி,

குடையில்லா தினங்களின் மழை,

ஸ்வீட் கடைக்கு முன் நிற்கும் முதற்சில நிமிடங்கள்,

அம்மாவின் மடியில் முந்தானைப் போர்வையில் சிறு தூக்கம்,

அப்பாவின் தட்டிலிருந்து
அவர் கைப்பிடி சாப்பாடு,

புகுந்த வீட்டிலும் விட்டுக் கொடுக்காத அக்காவின் அக்கறைகள்…

இவையெல்லாம் குறுக்கு வழியில் குழந்தை பருவத்துக்கு கூட்டிச் செல்லும் வழித்தடங்கள்…

பசி

தன் முகம்
மறக்க வைத்து
தாய் முகம்
நினைக்க வைக்கிறது – பசி…

அவள்பா இன்பப்பா

ஒற்றை முத்தத்தில் இரட்டைச் சத்தங்கள் – மகள்பேறு மாதங்களில் ….

அவள் மடி தாண்டா மகளுக்கும்,
என் மனம் தாண்டா என்னவளுக்கும்..

#அவள்பா இன்பப்பா!!!

அம்மா கவிதை

ஆராதனை காட்டி, தட்சணை கேட்கா கடவுள் அவள் – அம்மா…

அர்ச்சனை பேசிட அவள் பக்தி என்மேல்…