கண்கள் கவிதை

கருப்பு வானத்தில்
இருவெண் நிலாக்கள்
அவள் கண்களில்… விழியாக…!

அவள் விழி – பௌர்ணமி

அவள் கண் விழிக்கும் இரவுகள்,

முழுப் பௌர்ணமி என்றானதே அவள் விழி வெளிச்சத்தில்…

ஏன் கவிதை

அவள் பேரழகா? என்றால், பெரும் ரசிகன் நானென்பேன்…

அவளும் நிலவும்

அவளது முகம் காட்டி நிலாச் சோறு ஊட்டியது தாய் நிலா தன் கூட்டத்திற்கு – அதன் வானத்தில் ….

அவளும் நிலவும்

யாருமில்லா இரவுகளில் கண்விழித்து அவள் பாதச்சுவடு தேடுகிறது – நிலா….

அவளும் நிலவும்

வந்த வழி மறந்து எதிர் வழி செல்கிறது நிலா – அவளைப் பார்த்ததிலிருந்து…