அவளும் நிலவும்

இடவல இடம் நகர மறுக்கிறது நிலா – அவள் நின்றதைப் பார்க்கையில் மட்டும்….

அவளும் நிலவும்

தலைக்கண ஆகாயம் அன்றுதன் உயரம் குறைத்தது, அவளெட்டிப் பிடிக்காத தூரத்தில் அது இருப்பதாயெண்ணி….

அவளும் நிலவும்

அவள் பார்த்த அவ்வானம் நிறைந்திருந்தது, அவளைப் பார்த்து அப்படியே நின்ற நட்சத்திர கூட்டங்களால்…

அவளும் நிலவும்

சட்டென்று திரும்பி அவளை பார்த்த வானம், அவளதைப் பார்த்த அக்கணமே மின்னலானது….

அவளும் நிலவும் 

அவள் மேல் மாடி வரும்போது, அவள் காண அதன் கீழ் வீடு வருகிறது நிலா!!!

தீரா உலா

ஒரு வழிப் பாதை,
இரு கரம் கோர்த்து,
மீண்டு வரா தூரமென,
நீண்டு செல்கிறது – அவள் கரம் பிடித்து நடக்கையில்….

நட்சத்திர முகவரி

அவள் முகம் பார்த்து தன் முகவரி பெற்றது நட்சத்திரம் – 

அமாவாசை இரவுகளில்…

#அவளதிகாரம்
#அவள்பா

பிரித்தாளும் சூழ்ச்சி

பிரித்தாளும் சூழ்ச்சியில் தோற்றுப் போகிறது இமை…

என்னவளை என்னெதிர்காணும் போது…
#நிலவதிகாரம்