அவளும் நிலவும்

அவளது முகம் காட்டி நிலாச் சோறு ஊட்டியது தாய் நிலா தன் கூட்டத்திற்கு – அதன் வானத்தில் ….

அவளும் நிலவும்

யாருமில்லா இரவுகளில் கண்விழித்து அவள் பாதச்சுவடு தேடுகிறது – நிலா….

அவளும் நிலவும்

வந்த வழி மறந்து எதிர் வழி செல்கிறது நிலா – அவளைப் பார்த்ததிலிருந்து…

அவளும் நிலவும்

இடவல இடம் நகர மறுக்கிறது நிலா – அவள் நின்றதைப் பார்க்கையில் மட்டும்….

அவளும் நிலவும்

தலைக்கண ஆகாயம் அன்றுதன் உயரம் குறைத்தது, அவளெட்டிப் பிடிக்காத தூரத்தில் அது இருப்பதாயெண்ணி….

அவளும் நிலவும்

அவள் பார்த்த அவ்வானம் நிறைந்திருந்தது, அவளைப் பார்த்து அப்படியே நின்ற நட்சத்திர கூட்டங்களால்…

அவளும் நிலவும்

சட்டென்று திரும்பி அவளை பார்த்த வானம், அவளதைப் பார்த்த அக்கணமே மின்னலானது….

அவளும் நிலவும் 

அவள் மேல் மாடி வரும்போது, அவள் காண அதன் கீழ் வீடு வருகிறது நிலா!!!