சே

உலகம் சுற்றிய சுதந்திர பறவை , இதன் வாசம் சுதந்திர சுவாசம்

பயணம்

கடந்து வந்த பயணங்கள் , கறைந்து செல்லும் காட்சிகள் , உறைந்து விட்ட உணர்வுகள் இவற்றுடன் ஊடுருவிச் செல்கிறது என் பயணம் , இந்த பயணத்தில் சுழன்றது கனரக கால் சக்கரம் மட்டுமல்ல என் கனவு சக்கரமும் தான்

 

வான் வெளியில் ஒரு கடல் பயணம்

ஐந்து முறை அலாரம் வைத்து , அந்த ஐந்திற்க்கும் முன் எழுந்து அதை அணைத்து பரபரப்பாக கிளம்பிய பறக்கும் பயணம் -பயம் கலந்த முதல் காதல் மட்டுமல்ல பயம் கலந்த முதல் பயணமும் மறக்க முடியாது இதை யாரும் மறுக்க முடியாது

வான் பயணத்தில் சுவாசிக்க ஆக்சிசன் வறட்சி வரும் என்று வரும்முன் சொன்னவர்களால் , பயணத்தை கவிதையாக வாசிக்க வார்த்தைகளுக்கும் வறட்சி வரும் என சொல்ல மறந்தது ஏனோ ?

உவமைகளாக கேட்ட அனைத்தையும் உருவமாக உணர்கிறேன்

உயர்ந்த மனதுடன் உயர்ந்த இடத்தில் இருந்து உணர்ந்தவை இவை

கல்லூரி வாகனம்

கல்லூரி வாகனம் இருமடங்கு கவனம் தேவை – உடல் மட்டுமல்ல உள்ளமும் பாதிக்கப்படலாம்(பாதி ஆக்கப்படலாம்)