ஐஸ்கிரீம் கொள்ளளவு – மகளதிகாரம்

எவ்வளவு பிடிக்குமென்றேன்,
கொள்ளளவாக ஐஸ்கிரீம் போல் பிடிக்குமென்றால்,

அவள் போல் பிடிவாதமாய் அன்றிலிருந்து கரைய மறுக்கிறது அவ்வைஸ்கிரீம் என்னன்பில் போட்டியிட….

#மகளதிகாரம்

விண்மீன் நடுவே நிலவு

என்னவளுக்கென விதைத்த விண்மீனெல்லாம் விளைந்தது நிலவுடன் விளையாடித் துணையாட….

#மகளதிகாரம்