புதி(த)ராகிப்போனேன்

எனக்கு மட்டும் விரைவாக விடியும் காலை , வெளிச்சமான இரவு , இருள் சூழ்ந்த சூரியன் , வாடிக்கைக்கு எதிர் திசையில் என் பயணம் ,அயல் நாட்டு நேரம் காட்டும் என் கடிகாரம் . கண்டு பிடித்தீர்களா என்னை ? ஆம் நான் தொலைந்து போன கார்ப்ரேட் கவி(லை)ஞன்

Complicated Graphs

தேடல்

களவு போன கனவுகள் – தேடுகிறேன் பகலில்

aranarruti_Girl in the Rain_ZEBkRw

அடையாள அட்டை

எனக்கென நான் கொண்ட அடையாளம் இது மட்டுமே – அடையாள அட்டை

தொலை தூரம்

வேற்றிடம் உணர்த்துகிறது சில நிரப்ப முடியாத வெற்றிடங்களை

இன்றைய மனிதன் – ஓர் அறிமுகம்

இன்றைய மனிதன் – ஓர் அறிமுகம் :

இயந்திர மனிதன்,
இணைய வாசி,
ஒற்றை அட்டைக்குள் மொத்த பணம்,
தொலை தூர தொடர்புகள்,
தொடுதிரையில் மட்டும் உணர்வுகள்,
தொட்டுப்பார்த்து உண்ணாத உணவுகள்,
வாசனையான வணக்க வார்த்தைகளுக்கு மட்டும் உறவுகள்,
மொபைல் வடிவில் ஐவிரல் இடுக்கில் சிக்கிக்கொண்ட அவன் உலகம்,
அருகில் இருந்த வாழ்க்கையை விட்டுவிட்டு, இல்லாத வாழ்க்கையை இன்னும் தொலைநோக்கி கொண்டு தொடர்கிறான் (தொலைக்கிறான்) ……

iyanthira_manithan

படம் : பொன்னி சரவணன்

முகபுத்தகம்   https://www.facebook.com/groups/150763675094428/

தொடு திரை

இன்றைய உலகில் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் இடம் – தொடு திரை

phone

படம் : பொன்னி சரவணன்

முகபுத்தகம்   https://www.facebook.com/groups/150763675094428/

கண்ணாடி கட்டிடம்

கண்ணாடி கட்டிடத்தின் பளபளப்பிற்கு காரணம் துடைக்கப்படும் தண்ணீர் மட்டும் அல்ல அங்கு வேலை பார்ப்பவர்களின் கண்ணீராகவும் இருக்கலாம்

காலாவதி (நாலாவதி)ஆன நாள்காட்டி

விடுமுறை அன்று வேலைக்கு செல்லும் நான் “இன்று விடுமுறை” என்று சொல்லும் நாட்காட்டியிடம் கேட்கிறேன் , நீயும் காலாவதி ஆகிவிட்டாயா என்று