கொஞ்சம் மனிதம்

செருப்பில்லாத கால்கள் கடந்து செல்வதைப் பார்க்கையில்,

என்னுள் வலிக்கிறது எப்போதோ என் காலில் குத்திய முள்.

சொந்த ஊர்

சொந்த ஊர் தண்ணீரின் சுவையை மிஞ்சிடுவதில்லை எந்த ஊர் தண்ணீரும்…,

இதில் அதிகம் இனிப்பது சொந்த ஊரா, தண்ணீரா என்ற கலப்படம் தெரிவதில்லை…

ஈரம்

நனையாத
மழைத்துளி
நனைத்துச் செல்கிறது…

இதில் நனைந்தது யாரோ!

Nanayaatha
Mazhai Thuli
Nanaithuch selkiradhu…

Ithil nanindhadhu yaaro!!!

அவள் நீயா, இல்லை அவன் நானா?
வேறுபாடின்றி அது நாமா???

விழி பெய்யும் துளியும்
மழை வெள்ளம் தானே!

துளி செல்லும் வழியும்
நெடுந்தூரம் தானே!!!

துளி சொல்லா வலியில்
நம் மனம் தூரம் தானே!

Aval neeya, illai avan naana ?

Verupaadinri athu naama ?

Vizhi peyyum mazhayum

Thuli vellam thaanea.,

Thuli sellum vazhiyum,

Nedum thooram thaanea.,

Thuli solla valiyil

Nam Manam thooram thaanea !!!

மின்னல் கண்கள்

மழை இல்லா
வெறும் வானத்தில்
இடைவிடா மின்னல்,….

பார்வை குறைந்த
தெருவிளக்கு
கண் சிமிட்டுகிறது
மின்னலாய்…

Mazhai illa
Verum vaanathil
Idaivida minnal,

Paarvai kuraintha
Theru vilakku
Kan simittukiradhu
Minnalaai….!

சமகால சகவாசி வாசி

நெருக்கடியான இடம் தான் இதயம்,

ஆனாலும் இருக்கிறது இடம்,
அடுத்த புத்தகத்தை படித்துச் சேமிக்க…

Nerukkadiyaana idam thaan ithayam,

Aanaalum irukkiradhu idam,
Adutha puthakathai padithu semikka…

எல்லா அழுகையும் வலிப்பதில்லை

அடிப்பேன்
எனச் சொல்லிட
அழுதிட்ட குழந்தைகள்,

அழுதிடுவதில்லை
வலித்திடும் போதுகூட –
வளர்ந்து நிற்கையில்…

Adippen
ena sollida
Azhuthitta kulanthaikal,

Azhuthiduvathillai
Valiththidum podhu kooda –
Valarnthu nirkkayil…

நற்பிரிவு

தேடி,
தொலைந்து,
தொலைத்த பயணத்தில்,
முரண்பாட்டு மூட்டைகள்
மீதச் சுமை கொண்டு
நற்பிரிவாய் நான், நீ…
பிரிவோம் சந்திக்காமல்…

#நற்பிரிவு

Blog at WordPress.com.

Up ↑