மகளதிகாரம் – கதை பேசி

விடியல் தேடும் இரவுகளில் விக்ரமாதித்தன் நான்,
நான் விடாத குட்டி வேதாளமாய் அவள்…

#மகளதிகாரம்

மகனதிகாரம்

காற்று வீசி பார்த்த மரங்களெல்லாம்,
கதை பேசி கேட்கிறேன் என்னவன் கதைகளால்…

#மகனதிகாரம்

மகளதிகாரம்

விண்நிலா வீடு செல்ல “செல்லமாய்” ஓர் உத்தரவு ,
என்னவள் தூங்கச் செல்வதால்….

#மகளதிகாரம்

நிலவு”கள்”

அவளுடன் இருந்த அவ்விரவில் நான் கண்டது “நிலவுகள்”….

கம்யூனிச காதல்

என்றோ, யாரோ இட்ட தீ இன்னும் பற்றி எரிகிறது ஏழையின் பசி வயிற்றில்…